சுடச்சுட

  

  கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்புக் கூட்டம் திருவிதாங்கோட்டில் நடைபெற்றது.

  இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.ஏ. கான் தலைமை வகித்தார். கல்விக்குழு பொருளாளர் எஸ். அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தார். கல்விக் குழு உறுப்பினர் எஸ். ஜலாலுதீன் சிறாஅத் ஓதினார்.

  மார்க்க கல்வி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் எம். முஹம்மது ஸியாது, கல்விக் குழு உறுப்பினர்கள் எம்.எம். மீரான் முஹைதீன், எம். முஹம்மது ராபி, எஸ்.எம். ஜாஹீர் உசைன், எம்.பி.கே. நாஸர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  இதில், கூட்டமைப்பு பொதுச்செயலர் எம்.ஏ.கான் பேசியதாவது: கல்விக் குழு சார்பில் அக்.18 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி கலந்துகொண்டு மாணவர், மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் உதவித்தொகை வழங்குகிறார். தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் சிறப்புரையாற்றுகிறார் என்றார் அவர்.

  கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai