சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

    By நாகர்கோவில்  |   Published on : 06th October 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    நாகர்கோவில் மறவன்குடியிருப்பு சர்ச் தெருவைச் சேர்ந்தவர் வில்சன் (42). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் வில்சன் விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

    இந்நிலையில் குடும்பத்துடன் அவர் இரண்டு நாள்களுக்கு முன் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை அவர் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai