Enable Javscript for better performance
ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் புரட்டாசி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் புரட்டாசி திருவிழா

    By சுரண்டை  |   Published on : 06th October 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் புரட்டாசி மாத தர்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி காலை 8 மணிக்கு உகப்பணிவிடை மற்றும் திருஏடு வாசிப்பும், முற்பகல் 11 மணிக்கு உலக புனிதஜோதி பணிவிடையும், நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடையும் நடைபெற்றது.

    தொடர்ந்து அன்னதர்மம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுரண்டை, சிவகுருநாதபுரம், வரகுணராமபுரம், அழகாபுரிபட்டணம், காமராஜ் நகர், கீழச்சுரண்டை மற்றும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுரண்டை சுற்று வட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபை நிர்வாகி அழகுசுந்தரம் தலைமையில் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai