சுடச்சுட

    

    ஈரான் சிறையில் உள்ள குமரி மீனவர்களை விடுதலை செய்யக் கோரி 10இல் ஆர்ப்பாட்டம்

    By நாகர்கோவில்  |   Published on : 07th October 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரான் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, நாகர்கோவிலில் அக். 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மீன் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

    குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க சி.ஐ.டி.யூ. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கே. அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜி. செலஸ்டின், மாவட்ட பொதுச் செயலர் எஸ். அந்தோனி, பி. டிக்கார்தூஸ், எஸ். தங்கம், கே. மரியஜார்ஜ், அலெக்ஸ், ராதா, மரியஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு ஈரான் சிறையில் இருக்கும் மணக்குடி, சின்னத்துறை, பூந்துறை மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகர்கோவில் வடசேரியில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன் அக். 10ஆம் தேதி, பிற்பகல் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai