Enable Javscript for better performance
ஏழுதேசம் பேரூராட்சியில் ஜி.எஸ். மணி நினைவு தினம்- Dinamani

சுடச்சுட

    

    ஏழுதேசம் பேரூராட்சியில் ஜி.எஸ். மணி நினைவு தினம்

    By களியக்காவிளை,  |   Published on : 07th October 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழுதேசம் பேரூராட்சி மற்றும் வாவறை ஊராட்சிப் பகுதிகளில் ஜி.எஸ். மணி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவரும், விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.எஸ். மணியின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி, ஏழுதேசம் பேரூராட்சி, வாவறை ஊராட்சிப் பகுதிகளில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக்கம்பங்களில் கொடி ஏற்றப்பட்டு, ஜி.எஸ். மணி திருவுருவப் படம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருமான ஆர். செல்லசுவாமி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் அருளப்பா, வட்டாரக் குழு உறுப்பினர்கள் அலக்ஸ், வல்சலம், முன்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விக்டர், ரவி, டி.ஒய்.எப்.ஐ. இயக்க முன்சிறை வட்டாரத் தலைவர் குமரேசன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai