சுடச்சுட

    

    ஒரு மணி நேரத்தில் அறிவிப்பை திரும்பப் பெற்ற தனியார் பள்ளிகள்

    By நாகர்கோவில்  |   Published on : 07th October 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, குமரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (அக்.7) மூடப்படும் என்று அறிவித்த மாவட்ட நர்சரி, மெட்ரிக், ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி கூட்டமைப்பினர், சிறிது நேரத்தில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.

    கன்னியாகுமரி மாவட்ட மெட்ரிக், நர்சரி, ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள குமரி மெட்ரிக் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர். அப்புநடேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சி. சுப்பிரமணிய பிள்ளை, இணைச் செயலர் எஸ். சொக்கலிங்கம் செயற்குழு உறுப்பினர் டி. ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்துக்குப் பின்னர், அப்புநடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி குமரி மாவட்டத்தில் உள்ள 403 தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மூடப்படும். அதற்கு கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். மாநில கூட்டமைப்பின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்றார்.

    கூட்டம் நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள், தனியார் பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 7ஆம் தேதி வழக்கம்போலச் செயல்படும் எனக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். மாநில கூட்டமைப்பினர் மேற்கொண்ட முடிவையடுத்து இந்தத் தகவலை அவர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai