சுடச்சுட

  

  சிற்றுந்து உரிமையாளர்கள் அமைதிப் பேரணி, அதிமுக மனிதச் சங்கிலி

  By தக்கலை,  |   Published on : 07th October 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, தக்கலையில் சிற்றுந்து உரிமையாளர் சங்கம் சார்பில் அமைதிப் பேரணியும், அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டமும் திங்கள்கிழமை நடைபெற்றது.

  சிற்றுந்து உரிமையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியானது பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்டு காமராஜர் பேருந்து நிலையம் வழியாக தக்கலை தலைமை அஞ்சல் நிலையத்தைச் சென்றடைந்தது.

  அமைதிப் பேரணிக்கு சிற்றுந்து உரிமையாளர் சங்க மாவட்டச் செயலர் அழகி. சி.மணி தலைமை வகித்தார். பொருளாளர் செல்லம், நிர்வாகிகள் ஜெர்வின், ஜான், ராஜன், செல்லம், வின்சென்ட் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பங்கேற்றனர். பேரணி காரணமாக மாவட்டத்தில் 245 சிற்றுந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் தக்கலை, திங்கள்நகர், குளச்சல், மார்த்தாண்டம், குழித்துறை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிற்றுந்துகள் இயக்கப்படவில்லை. கிராமங்கள் வழியாக இயக்கப்படும் சிற்றுந்துகளும் நிறுத்தப்பட்டன.

  மனிதச் சங்கிலி: தக்கலை பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே இருந்து தொடங்கப்பட்ட மனிதச் சங்கிலி போராட்டத்தில மணலி சந்திப்புவரை அதிமுகவினர் நின்றனர்.

  பின்னர், ஜெயலலிதா கைதை கண்டித்து மாலையில் அழகியமண்டபத்தில் இருந்து தக்கலை வரை பேரணி நடத்தினர்.

  இந் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட அதிமுக செயலர் டி.ஜெங்கின்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், பத்மநாபபுரம் நகரச் செயலர் ஜகபர்சாதிக், மாவட்ட துணைச் செயலர் கே.ஏ.சலாம், நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி, அரசு வழக்குரைஞர் செல்வராஜன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் அமல்ராஜ், வழக்கரைஞர் பிரிவு இணைச் செயலர் சௌந்தர், சமூக ஆர்வலர் தக்கலை சந்திரன், நகர இளைஞரணிச் செயலர் சுனில்பாபு, ஓட்டுநர் அணிச் செயலர் சிவ செந்தில்குமார், நகர பாசறைத் தலைவர் ராஜா, மகளிரணி நிர்வாகிகள் பிரசன்னகுமாரி, லிசம்மா, நிர்வாகிகள் ஜான்தங்கம், ஜேம்ஸ், டாக்டர் மாதேசன், மூர்த்தி, அல்லாஜ், மாஹீன், பீர்முகம்மது, றீயாத், கிளைச் செயலர்கள் மணிகண்டன், ஹரிகுமார், சதீஸ், ஜகபர்சாதிக், நகர்மன்ற துணைத் தலைவர் பீர்முகம்மது, உறுப்பினர்கள் மணிகண்டன், பாருக் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். சிற்றுந்து உரிமையாளர் சங்கத்தினரும் இதில் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai