சுடச்சுட

    

    சுரண்டை அருகே கிணற்றில் தவித்த மயிலை தீயணைப்பு மற்றும் மீட்புதுறையினர் மீட்டனர்.

    சுரண்டை அருகேயுள்ள வாடியூரைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரது கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து தத்தளித்தது. இது குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வி.சேகர் தலைமையில் வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி அங்கு தத்தளித்த மயிலை மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai