சுடச்சுட

    

    திருச்செந்தூரில்காரில் இருந்த நகை திருட்டு

    By திருச்செந்தூர்,  |   Published on : 07th October 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் காரில் இருந்து நகை மற்றும் செல்போனை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

    மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த சோலையப்பன் மகன் மணிகண்டன் (30). இவர் அங்குள்ள தனியார் கேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்துள்ளார். காரை நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு, அவர்கள் அங்குள்ள ஹோட்டலுக்குச் சென்றனராம். காரில் ஓட்டுநர் செண்பகராஜ் (24) மட்டும் தூங்கிக்கொண்டிருந்தார்.

    அப்போது மர்மநபர்கள் காரில் இருந்த கைப்பையை எடுத்து, அதிலிருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் செல்போனையும் திருடிச் சென்றுள்ளர். இதுகுறித்து எஸ்.ஐ. ராணி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai