Enable Javscript for better performance
திருவட்டாறு அருகே மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    திருவட்டாறு அருகே மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு

    By குலசேகரம்  |   Published on : 07th October 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவட்டாறு மாணவரைத் தாக்கியதாக ஆசிரியை மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    திருநந்திக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன், ரப்பர் பால்வடிப்புத் தொழிலாளியான இவரது மகன் அபிஷேக் (12). ஏற்றக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த வாரம் இம் மாணவரை கணித ஆசிரியை சித்திரா (40) என்பவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 1 ஆம் தேதி குலசேகரம் அரசு மருத்துமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து 3 ஆம் தேதி ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் இப் பிரச்னை குறித்து மாணவரின் தந்தை தங்கப்பன் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் ஆசிரியை சித்திரா மீது வழக்குப் பதிந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai