Enable Javscript for better performance
தேமுதிக ஒன்றியச் செயலருக்கு அரிவாள் வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    தேமுதிக ஒன்றியச் செயலருக்கு அரிவாள் வெட்டு

    By வள்ளியூர்,  |   Published on : 07th October 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நான்குனேரி தே.மு.தி.க. ஒன்றியச் செயலரை திங்கள்கிழமை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    நான்குனேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தைச் சேர்ந்தவர் வானமாமலை(48). இவர் நான்குனேரி ஒன்றிய தே.மு.தி.க. செயலராக செயல்பட்டு வருகிறார். தற்போது நான்குனேரி மருத்துவர் தெருவில் குடும்பத்தினரோடு வசித்து வருகிறார்.

    இவரது சொந்த ஊரான மஞ்சங்குளத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கோயில் கொடைவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாம். இதனை அடுத்து வானமாமலை ஒரு தரப்பைச் சேர்நதவர்களை கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பைச் சேர்ந்த சொரிமுத்து மகன் ஆறுமுகம், சொக்கலிங்கம் மகன் சுடலைக்கண்ணு ஆகிய இருவரும் வானமாமலை வீட்டிற்கு வந்து அவரிடம் தகராறு செய்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டனராம். இதில் பலத்த காயமடைந்த வானமாமலையை அவரது உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக நான்குனேரி காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai