சுடச்சுட

    

    நாகர்கோவில் முதல் குமரி வரை அதிமுகவினர் மனிதச் சங்கிலி போராட்டம்

    By நாகர்கோவில்  |   Published on : 07th October 2014 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 23 கி.மீ. தொலைவுக்கு அதிமுகவினர் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

    குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் வடசேரி எம்.ஜி.ஆர். சிலை முன்பிருந்து மனிதச் சங்கிலி தொடங்கி கன்னியாகுமரி வரை நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்டச் செயலர் என். தளவாய் சுந்தரம் தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், நாஞ்சில் ஏ. முருகேசன் எம்.எல்.ஏ, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். வடசேரி முதல் கன்னியாகுமரி வரை அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.

    அவைத் தலைவர் சதாசிவம், பொருளாளர் ஞானசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்கிருஷ்ணன், பால்வளத் தலைவர் எஸ்.ஏ. அசோகன், காரவிளை செல்வன், சேவியர் மனோகரன், ஜெயசீலன், நகரச் செயலர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கிருஷ்ணகுமார், சகாயராஜ், வழக்குரைஞர் முருகேஷ்வரன், தாழக்குடி கூட்டுறவு சங்கத் தலைவர் சந்தோஷ், எஸ்.எம். பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் வட்டவிளை தென்திருப்பதி கோயிலில் ஜெயலலிதா விடுதலை ஆக வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதுபோல் புன்னைநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    உண்ணாவிரதம்: அகஸ்தீசுவரத்தில் திங்கள்கிழமை அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கு பேரூராட்சித் தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் என்.தளவாய்சுந்தரம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ, மாவட்ட அதிமுக அவைத் தலைவர் டி.சதாசிவம், துணைச் செயலாளர் ஏ.ராஜன், பொருளாளர் ஏ.ஞானசேகர், மாவட்ட மீனவரணிச் செயலர் சேவியர் மனோகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர் காரவிளை எம்.செல்வன், துணைச் செயலர் எஸ்.எழிலன், தென்தாமரைகுளம் பேரூர் செயலர் ஆர்.எஸ்.மாசானமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதேபோல், நாகர்கோவிலில் தனியார் சிற்றுந்து உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தில் 240 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிற்றுந்துகள் திங்கள்கிழமை இயக்கப்படவில்லை. இதில், 76 சிற்றுந்துகள் நாகர்கோவில் நகரப் பகுதிகளில் உள்ளன.

    சிற்றுந்து உரிமையாளர்கள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்டத் தலைவர் ஒய்சிலின் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலர் கண்ணன், பொருளாளர் பால்சாமி மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதுபோன்று தக்கலையிலும் போராட்டம் நடைபெற்றது.

    குலசேகரம்: ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சுவாமியார் மடத்திலிருந்து மேக்காமண்டபம் வரை திருவட்டாறு ஒன்றிய அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி நடைபெற்றது.

    திருவட்டாறு ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு ஒன்றிய அதிமுக செயலர் ஜெயசுதர்சன் தலைமை வகித்தார். போராட்டத்தை மேற்கு மாவட்ட அதிமுக செயலர் டி. ஜெங்கின்ஸ் தொடங்கிவைத்தார். இதில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதேபோல், ஆற்றூர் தர்ம சாஸ்தா கோயிலில் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, பொங்கல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவட்டாறு ஒன்றிய அதிமுக செயலர் ஜெயசுதர்சன் தலைமை வகித்தார்.

    மேற்கு மாவட்ட அதிமுக செயலர் டி. ஜெங்கின்ஸ் பொங்கல் பானையில் தீ மூட்டினார். இதில், மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், இலக்கிய அணிச் செயலர் டி. ஜான்தங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி: சாமிதோப்பு அன்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக்கு அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார்.

    குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் என். தளவாய்சுந்தரம், அவைத் தலைவர் டி. சதாசிவம், துணைச் செயலர் ஏ. ராஜன், பொருளாளர் ஞானசேகர், மாவட்ட மாணவரணிச் செயலர் டி. மனோகரன், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் பா. தம்பித்தங்கம், வடக்குதாமரைக்குளம் கூட்டுறவு சங்கத் தலைவர் என். பார்த்தசாரதி, பேராசிரியர் தர்மரஜினி உள்ளிட்டோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai