சுடச்சுட

  

  பக்ரீத்: மந்தாரம்புதூரில் சிறப்புத் தொழுகை

  By கன்னியாகுமரி  |   Published on : 07th October 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகை மந்தாரம்புதூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  தமிழகத்தில் அக். 5 ஆம் தேதி அரபா நோன்பு நோற்கவும், 6 ஆம் தேதி பக்ரீத் பெருநாள் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் உள்ள திடல்களில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.

  தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழு உறுப்பினர் ஹாஜாநூஹ் தலைமையில் கோட்டாறிலும், கன்னியாகுமரியை அடுத்த மந்தாரம்புதூரில் மாவட்ட பேச்சாளர் நிஷார் கபீர் தலைமையிலும், மாவட்டத் தலைவர் ஜலீல் தலைமையில் குளச்சலிலும் தொழுகை நடைபெற்றது.

  மந்தாரம்புதூரில் நடைபெற்ற தொழுகையில் கிளை தலைவர் மு.காஜாமுகைதீன் நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான், நாஸர், ஜாபர், ஹபிபுல்லா, சைபுல்லா, எம்.காஜாமுகைதீன், ஷெரீப், சம்சுதீன், நபீஸ், ரஷீத் மற்றும் மாவட்டச் செயலர் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai