Enable Javscript for better performance
பைங்குளம் ஊராட்சியில் \\\"தூய்மை இந்தியா\\\' திட்டம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பைங்குளம் ஊராட்சியில் "தூய்மை இந்தியா' திட்டம் தொடக்கம்

    By கருங்கல்,  |   Published on : 07th October 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பைங்குளம் ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, பைங்குளம் ஊராட்சித் தலைவர் சந்திரகுமார் தலைமை வகித்தார். முன்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார்.

    ஊராட்சி அலுவலக வளாகம், சாலைகள், தெருக்கள், கழிவுநீர் ஓடைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவைகளை ஊராட்சி உறுப்பினர்கள், சுயஉதவிக்குழு பெண்கள் துப்புரவு செய்தனர். மேலும், பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசார துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், ஊராட்சி துணைத் தலைவர் கேசவன், கூட்டலுமூடு கோயில் தலைவர் குமரேசதாஸ், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் குமார், சந்தோஷ் குமார், ராஜேஷ், விஜயராணி, சிங், தங்கம் மற்றும் சுயஉதவிக்குழு பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai