சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் விழா

    By நாகர்கோவில்,  |   Published on : 07th October 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சகாயபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    வீ கேர் அறக்கட்டளையின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா, மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் விழா சகாயபுரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாஸ்டர் டிரஸ்ட் இயக்குநர் நயினார் தலைமை வகித்தார்.

    மாவட்ட அமைப்பு சாரா தொழிற்சங்கத் தலைவர் மரியஸ்டீபன், அனுஷா டிரஸ்ட் இயக்குநர் சுப்பையா, மனித வள மேம்பாட்டுக்கான விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்குநர் பிச்சை, சுயஉதவிக் குழுக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாலினி, ரத்தக் கொடையாளர் கூட்டமைப்புப் பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏற்பாடுகளை வீ கேர் அறக்கட்டளை இயக்குநர் எஸ். ஆர். சுப்பிரமணியன், நிர்வாக டிரஸ்டி நிஷி முகம்மது அலி ஆகியோர் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai