Enable Javscript for better performance
அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவட்டாறு அருகே அரசுப் பேருந்து மோதி இளைஞர் இறந்தார்.

    ஆற்றூர் தோட்டவாரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோதர் (22). இவர், தனது உறவினர் பிரைட் ஜெனிபருடன் (22) நெய்யூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப் பார்ப்பதற்காக பைக்கில் சென்றனராம்.

    வெட்டுக்குழி பகுதியில் சென்ற போது எதிரே வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த இருவரும்  மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு வினோதர் இறந்தார். இதுகுறித்து திருவட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு விபத்தில் தொழிலாளி காயம்:

    குலசேகரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

    சுருளகோடு சாஸ்தா கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சபின். வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவர், சில நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் அவர் திங்கள்கிழமை குலசேகரத்திலிருந்து சுருளகோடுக்கு பைக்கில் சென்றாராம். அப்போது மங்கலம் பகுதியில் எதிரே வந்த அரசுப் பேருந்து, பைக் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சபின் குலசேகரம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai