Enable Javscript for better performance
ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி முடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஏழுதேசம் பேரூராட்சிப் பகுதியில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணிக்கு ஒப்பந்தப் பணியாளர்கள் வராததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இப்பேரூராட்சிப் பகுதியில் 2 ஆம் கட்டமாக ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி 10 நாள்கள் நடைபெற உள்ளதாக சில நாள்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட நாள்களில் புகைப்படம் எடுக்க பொதுமக்கள் குறிப்பிட்ட மையங்களில் திரண்டனர். ஆனால் புகைப்படம் எடுக்கும் ஒப்பந்தப் பணியாளர்கள் வராததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஏழுதேசம் பேரூராட்சித் தலைவர் ஏ. மேரிபாய் கூறியதாவது:

    விடுபட்டோருக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி இரு நாள்களுக்கு முன்பு நடைபெறும் என கிராம நிர்வாக அலுவலகம் மூலம் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் புகைப்படம் எடுக்கும் பணி மேற்கொள்ளும் ஒப்பந்தப் பணியாளர்கள் வராததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     எனவே, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு விடுபட்டோருக்கு புகைப்படம் எடுக்கும் பணியை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai