Enable Javscript for better performance
ஆராச்சர் நில விவகாரம்: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவில் பார்வதிபுரத்தில் ஆராச்சர் நிலம் விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் என். முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பன், மாதவன், தங்கமோகன், செல்லசாமி, வட்டாரக் குழுச் செயலர்கள் அந்தோணி, கண்ணன், ஆறுமுகம்பிள்ளை, சகாய ஆன்டனி, சுப்பிரமணியன், நிர்வாகிகள் ரெஜிஸ்குமார், முரளிதரன், ஜான், வில்சன், ராஜன் மலைவிளை பாசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஆராச்சர் நில விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் முறையாக நீதிமன்றத்தில் முறையீடு செய்து, நிலத்தை கைப்பற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. முன்னாள் எம்.பி. பெல்லார்மின் போராட்டத்தை நிறைவு செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai