சுடச்சுட

  

  ஈரான் சிறையில் உள்ள குமரி மீனவர்களை மீட்க வலியுறுத்தல்

  By DN  |   Published on : 08th October 2014 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகர்கோவில், அக். 7: ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் உள்ளிட்ட 25 பேரை மீட்க, உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தையும், குடியரசுத் தலைவரையும் தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.

  கன்னியாகுமரியில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனை, தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர்-தலைவர் பி. ஜஸ்டின் ஆன்டனி சந்தித்து மனு அளித்தார்.

  மனுவில் அவர் கூறியுள்ளதாவது: ஈரானில் பிடிபட்ட குமரி மீனவர்கள் உள்பட 25 பேரின் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். ஈரானிலுள்ள இம்மீனவர்களிடம் குறைகளைக் கேட்கவோ அல்லது இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவோ அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால், மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai