Enable Javscript for better performance
ஐரேனிபுரம் பள்ளியில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே உள்ள ஐரேனிபுரம் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சார்லஸ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை ஜாய்கமலம் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ் மாவட்ட திட்ட அலுவலர் செல்வராஜ், விளாத்துறை ஊராட்சித் தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். களப்பணியை பள்ளித் தாளாளர் டாக்டர் ஆல்பிரட் தொடங்கிவைத்தார். மாணவர்கள் ஐரேனிபுரம், வெள்ளையம்பலம், கைசூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரோடைகளை சீரமைத்தனர்.

    இதில், உதவி தலைமை ஆசிரியை நிர்மலா, ஆசிரியர் மன்றச் செயலர் ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai