சுடச்சுட

    

    குலசேகரம் அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்த பாஜகவினர்

    By DN  |   Published on : 08th October 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் படி குலசேகரம் அரசு மருத்துவமனை வளாகத்தை பாஜகவினர் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்தனர்.

    திருவட்டாறு ஒன்றிய பாஜக சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு  ஒன்றிய பாஜக தலைவர்  வினோத்குமார் தலைமை வகித்தார்.

    இதில் குலசேகரம், திற்பரப்பு, பொன்மனை பேரூராட்சித் தலைவர்கள் ராதா தங்கராஜ், புஷ்பரதி, பிரசன்னகுமாரி, மாவட்ட பாஜக செயலர் ஷீபா பிரசாத், மாவட்ட துணைத் தலைவர் ராஜமணி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் அஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பழனிதங்கம், செல்வராஜ், மனோகரன், சைலஜாகுமாரி, லீலாபாய், லதாமேரி, சந்திரன், சுனிதா, ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந் நிகழ்ச்சியில் அரசு மருத்துமனை வளாகத்தில் மண்டிக் கிடந்த புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்றினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai