சுடச்சுட

  

  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் உரையை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பு செய்ததற்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து கட்சியின் கிள்ளியூர் வட்டாரத் தலைவர் எஸ். ராஜசேகரன் வெளியிட்ட அறிக்கை:

  அண்மையில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய விழாவையும் அதன் தேசியத் தலைவர் உரையையும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சுமார் ஒரு மணி நேரம் நேரலையாக ஒளிபரப்பு செய்தது. ஆர்.எஸ்.எஸ். ஒரு சர்ச்சைக்குரிய அமைப்பு. இந்த அமைப்பின் தேசியத் தலைவர் மோகன்பாகவத் மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சிப் பொறுப்பில் உள்ள நபர் அல்ல.

  அப்படிப்பட்ட நபர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு பொது அமைப்பான தூர்தர்ஷன் தொலைக்காட்சி இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது மோசமான கலாசாரமாகும். அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்துவதையே இது காட்டுகிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. இதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai