சுடச்சுட

  

  நாகர்கோவில், அக். 7: நாகர்கோவிலில் குறளகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

  திருக்குறள் ஆய்வு மையத் தலைவர் கேசவ சுப்பையா தலைமை வகித்தார். குறளக நிறுவனர் தமிழ்க்குழவி அறிக்கை வாசித்தார். கள்ளிகுளம் நாடார் சங்க கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பாஸ்ரீ குறட்பா ஒளியில் அருட்பாமழை என்ற தலைப்பில் வள்ளலார் குறித்து பேசினார். குறளக மாணவி சிறுமலர் பள்ளி பிரதிஷா, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் என்ற தலைப்பில் பேசினார்.

  நிகழாண்டில் 1,330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பித்து வெற்றிபெற்ற குறளகத்தில் குறள் பயிலும் வடலிவிளை அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் அசோக், சபாஷினி, சிறுமலர் பள்ளி மாணவிகள் நிஷ்மிதா, ரித்திகா ஆகியோருக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர் டேனியல் பரிசு

  வழங்கினார்.

  விழாவில் விவேகானந்தா கல்லூரி முதல்வர் பொன்னுலிங்கம், அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் பத்மநாபன், பன்னாட்டு தமிழ் உறவு மன்றத் தலைவர் கோ. முத்துக்கருப்பன், குமரி மாவட்ட கவிதை உறவுத் தலைவர் வானம்பாடி, பிரம்மஞான சங்கச் செயலர் பொன்மகாதேவன், கவிமணி மன்றப் புலவர் சிவதாணு, வழக்குரைஞர்கள் ஜோ. தமிழ்ச் செல்வன், சுப்பிரமணிய பிள்ளை, ராஜகோபாலன், குமரி தமிழ்வானம் சுரேஷ், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ரத்தினசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai