சுடச்சுட

    

    புத்தேரி ரயில்வே மேம்பாலம் தார்ச்சாலை மேம்பாட்டுப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

    By DN  |   Published on : 08th October 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் புத்தேரியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புத்தேரி ரயில்வே மேம்பாலம் ரூ.21.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர், ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவாக முடிக்க நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதன் பின்னர் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விசுவாசபுரத்தில் நடைபெற்று வரும் காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் தார்ச் சாலை மேம்பாட்டுப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

    ஆய்வின்போது கோட்டப் பொறியாளர்கள் சிதம்பரம், தனசேகர், உதவி கோட்டப் பொறியாளர்கள் மலர்விழி,விஜயா,சித்ரா, உதவி பொறியாளர்கள் டென்னிஸ், மருது பாண்டி உள்ளிட்டோர் இருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai