Enable Javscript for better performance
வடசேரி பேருந்து நிலையத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    வடசேரி பேருந்து நிலையத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

    By DN  |   Published on : 08th October 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.

    வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் தரம் குறைவான உணவுகள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றனவாம்.

    இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் சாலோடீசன் தலைமையில் அலுவலர்கள் சங்கரநாராயணன், ஐயப்பன், குமார் பாண்டியன், சிதம்பரதாணு ஆகியோர் சோதனை நடத்தினர்.

    திறந்த வெளியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள், போலி தேயிலை தூள்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai