சுடச்சுட

    

    நாகர்கோவிலில் அகில இந்திய கபடி போட்டி வியாழக்கிழமை (அக். 9) நடைபெறுகிறது.

    குமரி மாவட்ட கபடி கழகம் சார்பில் அகில இந்திய ஆண், பெண் இரு பாலாருக்கான "ஏ' கிரேடு கபடி போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் பிரிவில் 17 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொள்கின்றன. ஆண்களுக்கான போட்டியை மாவட்ட எஸ்.பி.மணிவண்ணனும், பெண்களுக்கான போட்டியை கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி காளிராஜனும் தொடங்கி வைக்கின்றனர். போட்டிகள் இம்மாதம் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai