சுடச்சுட

  

  அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து கருங்கல்லில் அ.தி.மு.க. பிரமுகர் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்தார்.

  கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியைச் சேர்ந்தவர் மணி(52). கருங்கல் பேரூர் 6 ஆவது வார்டு அ.தி.மு.க. செயலராக முழுநேரமாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலிலதா கைதை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கருங்கல்லில் நடைபெற்ற உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் இவர் தீவிரமாக பங்கேற்றார். இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரித்த தகவலை வீட்டில் உள்ள தொலைக் காட்சி மூலம் கண்ட மணி அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தாராம். இதனையடுத்து அ.தி.மு.க. பிரமுகர்கள் மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai