சுடச்சுட

    

    ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி ரப்பர் கழகத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By குலசேகரம்,  |   Published on : 09th October 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ரப்பர் கழக அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடத்திய இப்போராட்டத்திற்கு சிஐசியூ தோட்டம் தொழிலாளர் சங்கத் தலைவர் பி. பிடராஜன் தலைமை வகித்தார். இதில் எல்பிஎப் தொழிற்சங்கச் செயலர் விஜயன், ஜனதா தளம் தொழிற்சங்க மாவட்டப் பொதுச் செயலர் ஞானதாஸ், காங்கிரஸ் தொழிற்சங்கம் பால்ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். சிஐடியூ தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் வல்சகுமார் முடித்து வைத்துப் பேசினார். இதில் மருதம்பாறை, சிற்றாறு, குற்றியாறு, மயிலாறு கோட்டப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு: இது குறித்து சிஐடியூ தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் எம். வல்சகுமார் கூறியாதாவது: அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு டிச. 1 ஆம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் பல முறை ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டப் போராடங்களை நடத்தியுள்ளன. புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் சென்னையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஏற்கனவே 3 முறை அறிவிக்கப்பட்ட பின்னர் தேதி மாற்றம் செய்யப்பட்டது. தற்போது 4 ஆவது முறையாக வியாழக்கிழமை (அக்.9) சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கான தேதியும் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை தேதிகள் தள்ளி வைக்கப்படுவதால் தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai