சுடச்சுட

    

    குமரி பூம்புகார் படகுத் துறையில் ஆட்சியர் ஆய்வு

    By கன்னியாகுமரி  |   Published on : 09th October 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பாக அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

    சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனை சரிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு நடத்தினார்.

    கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள படகு தளம் குறுகலாக இருப்பதால் படகுகளை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதனால் பயணிகள் பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

    படகு தளத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராடும் பகுதி, சூரிய அஸ்தமன பூங்கா, வட்டக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆட்சியருடன் மாவட்ட சுற்றுலா அலுவலர் வே.ஹரிராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவி செயற் பொறியாளர் பால்ஜெபஞானதாஸ், ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் ஜி.கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் க.அம்புரோஸ் (பொ) உள்ளிட்டோர் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai