சுடச்சுட

    

    சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு:4 பேர் மீது வழக்கு

    By கருங்கல்  |   Published on : 09th October 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருங்கல் அருகே உள்ள துண்டத்துவிளையில் சகோதரர்களை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள் 4 பேர் மீது கருங்கல் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கருங்கல் கொல்லன்விளை பகுதியைச் சேந்த செல்லத்துரை மகன் லெனின்துரை(24). இவரது சகோதரர் அசோக்துரை(26) இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த எலியாஸ் மகன்கள் ஜோசப்ராஜ்(25), ராஜேந்திரன்(23), மரியஜெனிஷ்(22) உள்ளிட்ட 4 பேருக்கும் கைப்பந்து விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை திடீரென இருதரப்பினரும் துண்டத்துவிளை பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜோசப்ராஜ், ராஜேந்திரன், மரியஜெரின் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்த கும்பல் சகோதரர்களை அரிவாளால் வெட்டினராம். இதில் லெனின்துரை, அசோக்துரை இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கருங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான 4 பேரையும் தேடிவருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai