Enable Javscript for better performance
தக்கலையில் பாஜகவினர் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பத்மநாபபுரம் நகர பாஜகவினர் தக்கலை பேருந்து நிலையத்தை புதன்கிழமை சுத்தம் செய்தனர்.

    தக்கலை காமராஜர் பேருந்து நிலைத்தில், நகரத் தலைவர் ரவீந்திரன் தலைமையில், நகர பொதுச் செயலர் ராஜா முன்னிலையில் துப்பரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை பாஜக மாவட்ட பொதுச் செயலர் குமரி ப.ரமேஷ் தொடங்கி வைத்தார் இதில் மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் சி.சுகுமாரன், நகர் பிரிவுத் தலைவர் உண்ணிகிருஷ்ணன், நகர் மன்ற உறுப்பினர் ஸ்ரீகுமார், நகர துணைத் தலைவர்கள் சுரேஷ்குமார், சுப்புலட்சுமி, சரவணன், தங்கதுரை, மகாலட்சுமி, நகரச் செயலர்கள் ஸ்டைலோ ரெகு, முருகேசன், கோபகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். பேருந்து நிலையம், பயணிகள் நிழற்கூடங்களில் துப்புரவு பணி செய்தனர். மாதம் இருமுறை இப்பேருந்து நிலைத்தில் துப்பரவு பணி மேற்கொள்ளப்போவதாக பாஜகவினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai