சுடச்சுட

    

    தற்கொலை முயற்சியில் தாய் சாவு:மகள் மருத்துவமனையில் அனுமதி

    By குலசேகரம்,  |   Published on : 09th October 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குலசேகரம் அருகே தாயும் மகளும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் செவ்வாய்க்கிழமை இரவு தாய் உயிரிழ்ந்தார்.

    சுருளகோடு பகுதியைச் சேர்ந்தவர் எமிலி (47). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் எமிலி தனது மகன் ராஜேஷ் (23), மகள் நிஷா (17) ஆகியோருடன் வசித்து வந்தார். அண்மையில் ராஜேஷ், தனது தாய் எமிலியின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்தாராம். இதனால் மனம் உடைந்த எமிலி தனது மகள் நிஷாவுடன் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்தராம். இதில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு எமிலி உயிரிழந்தார்.

    நிஷாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர் மணலிக்கரையிலுள்ள ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இது குறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai