Enable Javscript for better performance
தேசிய அளவிலான தமிழ் சுவிஷேச லுத்தரன் சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அளவிலான தமிழ் சுவிஷேச லுத்தரன் சபைக் கூட்டம்

    By கன்னியாகுமரி,  |   Published on : 09th October 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரியில் 2 நாள்கள் நடைபெற்ற தேசிய அளவிலான தமிழ் சுவிஷேச லுத்தரன் சபைக் கூட்டம் புதன்கிழமை நிறைவடைந்தது.

    அமைதி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 150 ஆயர்கள் பங்கேற்றனர். சபை தலைவர் பேராயர் எஸ்.எட்வின் ஜெயக்குமார் தலைமை வகித்து விழா மலரை வெளியிட்டார். இதனை சபை செயலர் ஈ.டி.சார்லஸ் பெற்றுக்கொண்டார்.

    கூட்டத்தில் திருச்சபையின் எதிர்கால திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும், இந்தியா முழுவதும் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு கல்வியறிவு, மருத்துவ வசதி கிடைக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அமைதி அறக்கட்டளை தலைவர் ஞான ராபின்சன், சென்னை குருகுலம் இறையியல் பேராசிரியர் இஸ்ரேல் செல்வநாயகம், அமெரிக்க லுத்தரன் கூட்டமைப்பின் தெற்காசிய செயலர் சந்திரன் பால் மார்ட்டின், மதுரை இறையியல் கல்லூரி பேராசிரியை ஆட்லின் ரெஜினாபாய் உள்ளிட்டோர் பேசினர். பொருளாளர் ஞானராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai