Enable Javscript for better performance
நாகர்கோவில் அருகே இயந்திரத்தில் சிக்கி ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவில் அருகே இயந்திரத்தில் சிக்கி ஊழியர் சாவு

    By நாகர்கோவில்  |   Published on : 09th October 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் அருகே வலை தயாரிக்கும் ஆலை இயந்திரத்தில் சிக்கிய ஊழியர் புதன்கிழமை இறந்தார்.

    திங்கள்சந்தை அருகே ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் அனீஸ் (19). இவர் நாகர்கோவில் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியில் ஒரு தனியார் வலை தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்து

    வந்தார்.

    இந்நிலையில், புதன்கிழமை அனீஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அனீஸ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

    இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai