சுடச்சுட

  

  திருவட்டாறு அருணாசலம் மேல் நிலைப் பள்ளி மற்றும் புனித லாரன்ஸ் மேல் நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடத்தின.

  மாடத்தட்டுவிளை ஆடலின் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற 7 நாள் முகாமில் குப்பையில்லா வளாகம், புகையிலை ஒழிப்பு, சுயவேலை வாய்ப்பு, இளமையில் கல்வி, அநீதி ஒழிப்போம், மனித நேயம், மரம் வளர்ப்பு ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் மற்றும் பணிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு கருத்தாளர்கள் கருத்துரை வழங்கினர்.

  ஆடலின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் ஏசுரத்தினம், தலைமை ஆசிரியர் கபரியேல் ஜெலஸ்டின், அருணாசலம் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் என். குணசேகர், நாகர்கோவில் வானொலி நிலைய அலுவலர் மங்காவிளை ராஜேந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஏ. ஜெயராஜ், கே. நாகேஷ், தொடக்கக் கல்வி அலுவலர் ( பொறுப்பு ) ஐ. ஜிம்சன் ஆகியோர் உரையாற்றினர்.

  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பி. ராதாகிருஷ்ணன், அகஸ்டின் ஆன்டனி ராஜன், உதவித் திட்ட அலுவலர் ஜோஸ் வால்டின் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai