சுடச்சுட

    

    புதிய வாக்காளர்கள் சேர்த்தல் விழிப்புணர்வுப் பேரணி

    By தக்கலை,  |   Published on : 09th October 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தக்கலையில் 18 வயது பூர்த்தியானவர்களை புதிய வாக்களர்களாக சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

    வட்டாட்சியர் அலுவலகம் முன் புறப்பட்ட இப்பேரணிக்கு பத்மாநாபபுரம் கோட்டாட்சிர் பா.அருண்சத்யா தலைமை வகித்தார், கல்குளம் வட்டாட்சியர் நாகேந்திரா, தேர்தல் துணை வட்டாட்சியர் கோலப்பன், மற்றும் அலுவலர்கள், அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், என்.ஐ. பல்கலைக்கழக மாணவர்கள், சுங்கான்கடை புனித சவேரியார். கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஸ்ரீ அய்யப்பா மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பத்மநாபபுரம், குளச்சல், சட்டப்பேரவை தொகுதிகளில், 01.01.2015-க்குள் 18 வயது நிரம்பியவர்கள், புதிய வாக்காளர் அட்டை பெறுவதற்காக இத்தொகுதிகளில் உள்ள 511 வாக்குச் சாவடிகளில் அக்.19 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இந்த சிறப்பு முகாமில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து அதே வாக்குச் சாவடியில் கொடுக்கவேண்டும் என்றார் பத்மநாபபுரம் தேர்தல் அலுவலர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai