சுடச்சுட

    

    கருங்கல் அஞ்சல் நிலையம் செல்லும் குறுக்கு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கருங்கல் கூனாலுமூடு சந்திப்பிலிருந்து அஞ்சல் நிலையம் வரை சுமார் 500 மீட்டர் தொலைவில் கருங்கல் பேரூராட்சிக்குச் சொந்தமான சிமென்ட் சாலை உள்ளது. இச்சாலை கடந்த ஆண்டு பெய்த மழையால் சேதமடைந்து சாலையின் நடுவே சிறு,சிறு குழிகள் ஏற்பட்டு, தற்போது ராட்சத பள்ளமாகியது.

    இதனால் அங்கு மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் சந்தை, அஞ்சல் நிலையம், ஆட்டோநிலையம் செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ராட்சத பள்ளத்தில் நீண்டநாள்களாக மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே இச்சாலையை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai