சுடச்சுட

    

    மீனவ கிராமத்தில் 2,500 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

    By களியக்காவிளை,  |   Published on : 09th October 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நித்திரவிளை அருகே மீனவ கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 2,500 லிட்டர் மண்ணெண்ணெயை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர்.

    குமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் புதன்கிழமை அதிகாலையில் நித்திரவிளை அருகே மீனவ கிராமத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இனயம்புத்தன்துறை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டை சோதனையிட்டபோது அங்கு பிளாஸ்டிக் கேன்களில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பதுக்கி வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 52 கேன், 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 11 கேன்களில் இருந்த 2,480 லிட்டர் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவை, மீனவர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் என்பதும் அவற்றை கேரளத்துக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெயை, சின்னத்துறையில் உள்ள மானியவிலை மண்ணெண்ணெய் கிட்டங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai