Enable Javscript for better performance
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக். 13 முதல் திறன் வளர் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக். 13 முதல் திறன் வளர் பயிற்சி

    By நாகர்கோவில்  |   Published on : 09th October 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான திறன் வளர் பயிற்சி அக். 13 ஆம் தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து தேரூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிக் கல்வித்துறையில் மேல்நிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாடவாரியாக இரண்டு நாள் திறன் வளர் புத்தாக்கப் பயிற்சி தேரூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

    அக். 13, 14 தேதிகளில் இயற்பியல் பாடத்திற்கான பயிற்சி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியிலும், வேதியியல் பாடத்திற்கான பயிற்சி கோட்டாறு கவிமணி பள்ளியிலும், விலங்கியல் பாடத்திற்கான பயிற்சி வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    அக். 15 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கணித பாடத்திற்கான பயிற்சி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியிலும், தாவரவியல் பாடத்திற்கான பயிற்சி கோட்டாறு கவிமணி பள்ளியிலும், விலங்கியல் பாடத்திற்கான பயிற்சி வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    அக்.17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆங்கில பாடத்திற்கான பயிற்சி நாகர்கோவில் டதி மகளிர் பள்ளியிலும், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்திற்கான பயிற்சி கோட்டாறு கவிமணி பள்ளியிலும், வரலாறு, புவியியல் பாடத்திற்கான பயிற்சி வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட செய்ய பயிற்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai