Enable Javscript for better performance
வடசேரி பேருந்து நிலையத்தில் சுகாதார கேடு ஏற்படுத்திய பன்றிகள் பிடிக்கப்பட்டன- Dinamani

சுடச்சுட

    

    வடசேரி பேருந்து நிலையத்தில் சுகாதார கேடு ஏற்படுத்திய பன்றிகள் பிடிக்கப்பட்டன

    By நாகர்கோவில்,  |   Published on : 09th October 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் சுகாதாரகேடு ஏற்படுத்திய 36 பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

    வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு நகராட்சி சார்பில் பன்றிகளை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையத்தில் புதன்கிழமை பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 36 பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai