சுடச்சுட

  

  வரவு - செலவில் குளறுபடி: உறுப்பினர்கள் புகார்

  By களியக்காவிளை,  |   Published on : 09th October 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வன்னியூர் ஊராட்சியில் வரவு- செலவில் குளறுபடி காணப்படுவதாக ஊராட்சி உறுப்பினர்கள் 6 பேர் இணைந்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

  வன்னியூர் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. ஊராட்சித் தலைவராக ஆர். வன்னியூர் பாபு செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் வார்டு உறுப்பினர்கள் லிசி, செறுபுஷ்பம், அம்பீதரன், ஜெயசுதா, கெங்காதரன், ஜான்ஜெபராஜ் ஆகியோர் கூட்டாக, மாவட்ட ஆட்சியருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் அனுப்பிய மனு விவரம்: வன்னியூர் ஊராட்சி சதாரணக் கூட்டம் அதன் தலைவர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (அக். 7) நடைபெற்றது. கூட்டத்தில் 9 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். கூட்டப் பொருளில் 2014 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாத வரவு-செலவு கணக்கு குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் குளறுபடி காணப்படுகிறது. ஜூலை மாதம் இருப்புத் தொகை ரூ. 2.75 லட்சமும், அம் மாத வரவு ரூ. 2.22 லட்சமும் என கையிருப்புத் தொகை ரூ. 4.97 லட்சமும், செலவு 4.11 லட்சமும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் வரவு மற்றும் இருப்புத் தொகை ரூ. 1.10 லட்சம் என்றும், செலவு ரூ. 1 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரவு - செலவு குறித்து மன்றத் தலைவரிடம் விளக்கம் கேட்டு, அதற்கான ரசீதுகள் கேட்டபோது, அவற்றை உறுப்பினர்களிடம் காட்ட முடியாது எனக் கூறி மினிட் புத்தகத்தை எடுத்துச் சென்றுள்ளார். உறுப்பினர்கள் கையெழுத்திட வருகை பதிவேட்டையும் தரவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai