சுடச்சுட

    

    வேளிமலை குமாரசுவாமி கோயிலில் பௌர்ணமி கிரிவலம்

    By தக்கலை,  |   Published on : 09th October 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரகோவில், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில், பௌர்ணமியை முன்னிட்டு புதன்கிழமை கிரிவலம் நடைபெற்றது.

    பௌர்ணமியை முன்னிட்டு குமாரகோவில் சன்னிதி முன்பிருந்து தொடங்கிய கிரிவலம் கோயில் அமைந்திருந்த மலையை சுற்றி வலம் வந்து கோயில் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து கோயிலில் குமாரசுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கிரிவலத்தில் பங்கேற்ற பக்தர்கள் முருகன் நாமத்தை ஜெபித்தவாறு சென்றனர். இதில்

    குமாரகோவில் வேல்முருகன் சேவா சங்கத் தலைவர் தலைவர் டாக்டர். சி.சுகுமாரன், பொதுச் செயலர் ஜி. அஜிகுமார், கௌரவத் தலைவர் குமாரசுவாமி, கிரிவல அமைப்பாளர் மணி, பொருளாளர் கங்காதரன், விழாக்குழு அமைப்பாளர்கள் சதாசிவன், பாபு, சங்க அமைப்புச் செயலர் சுகுமாரன், நிர்வாகிகள் கே.இராமகிருஷ்ணன், என்.நாராயண மூர்த்தி, கோபாலகிருஷ்ணன் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

    ஸ்ரீ மௌனகுரு சுவாமி கோயில்: தோட்டியோடு ஸ்ரீ மௌன குருசுவாமி கோயிலில் பௌர்ணமி பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், அதனை தொடர்ந்து பஜனை, சொற்பொழிவு, கோமாதா பூஜை சிறப்பு பூஜை ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5-மணி முதல் சிவபுராணம் பாராயணம், திருவிளக்கு வழிபாடு, சொற்பொழிவு, நாம ஜெபம் , தியானம் ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் பி. சுகதேவன் செய்திருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai