சுடச்சுட

    

    கிள்ளியூர் வட்டார சுகாதாரத் துறை சார்பில் வியாழக்கிழமை அரசு தங்கும் விடுதிகளில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு மருத்துவமனைகள், காவல் நிலைய குடியிருப்புகள், அரசு மாணவர்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரத் துறையினர் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கிள்ளியூர் வட்டார தலைமை மருத்துவர் கிங்ஸ்ஸால் தலைமையில் வியாழக்கிழமை கருங்கல் அரசு மருத்துவமனை வளாகம், காவல் நிலைய குடியிருப்புப் பகுதிகள், பூட்டேற்றி ஆதி திராவிட மாணவிகள் தங்கும் விடுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார், ஆய்வாளர்கள் முருகன்,வின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai