சுடச்சுட

    

    கடையாலுமூடு அருகே தனியார் ரப்பர் தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிஐடியூ சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் செல்லப்பன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. ஏ.வி. பெல்லார்மின் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார்.

    சிஐடியூ மாநிலச் செயலர் எம். அண்ணாதுரை, மாவட்டத் தலைவர் பி. சிங்காரன், செயலர் தங்கமோகன், தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் எம். வல்சகுமார், தலைவர் பி. நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் என். முருகேசன் போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார். முன்னதாக கடையாலுமூடு சந்திப்பிலிருந்து பேரணி நடைபெற்றது.

    தனியார் ரப்பர் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மறுத்து வரும் உயர் மருத்துவ சிகிச்சையை மீண்டும் வழங்க வேண்டும்; தொழிலாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் வலியுறுத்தப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai