Enable Javscript for better performance
திருவட்டாறு அருகே பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவட்டாறு அருகே பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

    By குலசேகரம்  |   Published on : 10th October 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவட்டாறு அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை மோதி தள்ளிவிட்டு 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    மாத்தாறு பகுதியைச் சேர்ந்த வில்சன் மனைவி ஸ்ரீமதி (38). வியாழக்கிழமை ஏற்றக்கோடு அருகேயுள்ள பள்ளிக்கு தனது மகன்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்திவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பினாராம்.

    மாத்தாறு கால்வாய் கரைப் பகுதியில் சென்றபோது பின்னால் பைக்கில் சென்ற மர்ம நபர் ஸ்கூட்டர் மீது மோதி கீழே தள்ளி விட்டு ஸ்ரீமதியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பிவிட்டாராம். இதுகுறித்து திருவட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

    தொடர் சம்பவம்: திருவட்டாறு பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது போன்று 5 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் சாலையில் தனியே செல்லும் பெண்கள் பீதியடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai