சுடச்சுட

    

    நாகர்கோவிலில் காருக்கு தீ வைப்பு:போலீஸார் விசாரணை

    By நாகர்கோவில்,  |   Published on : 10th October 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     நாகர்கோவிலில் நள்ளிரவில் கார் தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    நாகர்கோவில் வாத்தியார் விளையைச் சேர்ந்தவர் வினோத் (23). இவர் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு ஸ்டுடி யோவில் வேலை செய்து வருகிறார்.

    நண்பர் மூலமாக பழைய கார் ஒன்றை இவர் விலைக்கு வாங்கி இருந்தார். கார் புதன்கிழமை இரவு வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கார் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து வடசேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai