சுடச்சுட

    

    நாகர்கோவிலில் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நல உரிமைச் சங்கம் சார்பில் முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு மாவட்டத் தலைவர் சி. பாக்கியநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அ. சண்முகம்பிள்ளை, கோ.முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் சிவ. சோமநாதன் விழாவைத் தொடங்கிவைத்தார். மாநில அமைப்புச் செயலர் கி. சுப்பிரமணியன், மாவட்ட அமைப்புச் செயலர் இ. பாலசண்முகம், பேராசிரியர் சிவ. பகவதிபெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    விழாவில், 80 வயதான சங்க உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சி.ராஜகோபால் என்பவரின் சமூக சேவையை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. ஆதரவற்ற முதியோர்களுக்கு துணைத் தலைவர் அ. சண்முகம் பிள்ளை வேட்டி, சேலை வழங்கினார். இணைச் செயலர் எம். மீராசா தீர்மானங்களை முன்மொழிந்தார்.

    முதியோர்களுக்கு நிதி, மருத்துவம், சமூக பாதுகாப்பு வழங்க தனி கொள்கை வகுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்ளப்பட்டது. மாவட்டச் செயலர் சி.பிறைசூடும் பெருமாள் பிள்ளை வரவேற்றார். பிரசாரச் செயலர் சி. பால்பாண்டி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai