சுடச்சுட

    

    நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நிரம்புகிறது

    By நாகர்கோவில்,  |   Published on : 10th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்து வரும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 24 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது.

    அணை நிரம்புவதன் மூலமாக நாகர்கோவில் நகரில் குடிநீர்த் தட்டுப்பாடுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ஒரு வாரமாக குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இம் மழை அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காணப்பட்டது. முக்கடல் அணையின் நீர்மட்டம் தற்போது 24 அடியை எட்டியுள்ளது.

    கடந்த செப்டம்பரில் அணையின் நீர்மட்டம் 15 அடியாக இருந்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. வியாழக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இம்மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் சில நாள்களில் அணை நிரம்பும் என்றும், இதன்மூலம் நாகர்கோவில் நகர் பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க முடியும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai