சுடச்சுட

    

    மதுவில்லா தமிழகம் வேண்டி பாரதிய வித்யார்த்தி பரிஷத் உண்ணாவிரதம்

    By நாகர்கோவில்,  |   Published on : 10th October 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் மதுவில்லா தமிழகம் உருவாக வேண்டி நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

    ஏ.பி.வி.பி. ஒருங்கிணைப்பாளர் விசு தலைமை வகித்தார். வழக்குரைஞர் ராஜகுஞ்சரம் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவைத்தார். ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் தேவபிரகாஷ் பேசினார்.

    இதில், அமைப்புச் செயலர் பரமேஸ்வரன், விசுவ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலர் நாகராஜன், மாவட்டச் செயலர் காளியப்பன், மது அடிமைகள் மறுவாழ்வு மைய ஆலோசகர் சுசீலா, முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ், கோட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி, வரவேற்புக்குழுத் தலைவர் ராஜன், மகளிரணி மாநில துணைச் செயலர் உமாரதி, வழக்குரைஞர் விக்டோரியா கவுரி, இந்து முன்னணி மாவட்டப் பொறுப்பாளர்கள் குழிச்சல் செல்லன், மிசா சோமன், நகரத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai