சுடச்சுட

  

  விளவங்கோடு கிராம நிர்வாகஅலுவலகத்தில் சொத்துவரி ரசீது தட்டுப்பாடு

  By களியக்காவிளை,  |   Published on : 10th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விளவங்கோடு கிராம நிர்வாக அலுவலகத்தில் சொத்துவரி ரசீது தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  விளவங்கோடு கிராம நிர்வாக அலுவலகம் விளவங்கோடு, களியக்காவிளை, குழித்துறை நகரம் என மூன்றாக பிரிக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் தினமும் ஏராளமானோர் தங்களது நிலத்துக்கான சொத்துவரி செலுத்த வருகின்றனர்.

  இந்நிலையில் தற்போது ஒரே அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் விளவங்கோடு, களியக்காவிளை கிராம நிர்வாக அலுவலகங்களில், வரி செலுத்த செல்லும் பொதுமக்களிடம் ரசீது புத்தகங்கள் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

  இதனால் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவது, நீதிமன்ற முன்ஜாமீன் பெறுவது உள்பட பல்வேறு தேவைகளுக்கு சொத்துவரி ரசீது கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கிராம நிர்வாக அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள சொத்துவரி ரசீது தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai